மூலிகைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம்

குமிழ் போன்ற கிழங்கினையுடைய நேராக வளரும் செடி. கிழங்கு சமையலுக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கக்கூடியது. சிறு வெங்காயம், பெரு வெங்காயம் என இரு வகையுள்ளன. சிறு வெங்காயமே காரம் மிகுந்தது. தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. அரிதாகக் கிடைக்கும் வெள்ளை வெங்காயம் மருத்துவப் பயன் மிகுந்தது.

வெப்பமூ லங்கிரந்தி வீறிரத்த பித்தமுடன்
செப்புநா அக்கரந்தீ ராத்தாகம் – வெப்புக்
கடுப்பருமன் தஞ்சந்தி காசவயிற் றுப்பல்
தடிப்பேறும் வெங்காயத் தால்.

வெங்காயம் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நல்ல முறையில் ஊக்குவிக்கிறது. இதனால் நமது உடலில் நோய் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். வெங்காயத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய வலிமை கிடைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவு வெங்காயம் தான்.

பயன்கள்

பச்சையாய் மென்று தின்ன நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் தீரும். உப்பைத் தொட்டு உண்டால் இரத்த வாந்தி, வயிற்று வலி, குன்மம், அழற்சி தீரும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட இரத்த பேதி, சீத பேதி, ஆசனக் கடுப்பு, மூலரோகம் தீரும்.வதக்கிக் கட்ட வெளி மூலம் குணமாகும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்துச் சாப்பிட பித்தம் குறையும்.

சமஅளவு வெங்காயச்சாறு, வளர்பட்டை செடி இலைச்சாற்றை கலந்து காதில்விட, காதுவலி குறையும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து அதனுடன் சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய்கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர, பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. செரிமானத்துக்கும் உதவுகிறது.வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!