மூலிகைகள்

துளசி மருத்துவ பயன்கள்

துளசியின் ஆங்கிலப் பெயர் ‘Ocimum sanctum’ என்பதாகும்.

துளவம் – துழாய் என்ற பெயர்களும் உண்டு. கருந்துளசி – செந்துளசி – நிலத்துளசி – முள்துளசி – கல்துளசி – நாய்த்துளசி என்ற வகைகளும் உண்டு. தமிழகம் எங்கும் தானே வளரக் கூடியது. வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. மாடம் கட்டி அதில் வளர்க்கப்படுகிறது. கற்பூர மணம் வீசக் கூடியது. சிறு செடியாய் வளரக் கூடியது. இலை – பூ – விதை – வேர் அனைத்தும் மருத்துவக்குணம் உடையது.

துளசி இலை மருத்துவ பயன்கள்

இலையை புட்டு போல் அவித்து பிழிந்து சாறு எடுத்து பெரியவர்களுக்கு 20 மி.லி அளவும் – குழந்தைகளுக்கு 5 மி.லி அளவும் கொடுத்தால் நெஞ்சில் உள்ள சளியை கரைக்கும். இதயத்துக்கும் – ஈரலுக்கும் பலத்தைக் கொடுக்கும். பசியை தூண்டும். பெண்களுக்கு தாய்ப்பாலை சுரக்க வைக்கும். பெண்களுக்கு உண்டான உதிரச் சிக்கலை நீக்கும்.

இலையை கசக்கி முகர நாசியடைப்பு – நீங்கும் மூக்கில் 2.3 துளி விட பீனிசம் போகும்.இதன் இலையை வாயில் போட்டு மெல்லுவதால் பல் கூச்சம் – பல் வலி தீரும்.

தினசரி 10 இலைகளை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் முகப்பொலிவு உண்டாகும்.

இதன் இலைச் சாற்றை மார்பு வீக்கங்களுக்கு பூசினால் வீக்கம் – வலி குறையும்.

இலைச் சாறும் நல்லெண்ணெய்யும் சம அளவு எடுத்துசாறு சுண்டக்காய்ச்சி காதில் விட காது வலி நீங்கும்.

இலைச்சாறும் – சிறிது தேனும் கலந்து தினசரி காலை – மாலை சாப்பிட்டுவர இதய நோய் குணமாகும்.

இலைச்சாறும் சாற்றுடன் இஞ்சி 1 துண்டும் – தாமரை வேர் கொஞசமும் அரைத்து கொதிக்க வைத்து – ஆறிய பிறகு பற்று போட இடுப்பு – விலா வலி குறையும்.

இதன் இலை – நொச்சி இலை – முசுமுசுக்கை இலை சம அளவு எடுத்து புட்டு அவியல் செய்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து 1/2 தேக் கரண்டி அளவு குழந்தைகளுக்கு கொடுக்க கணை தீரும்.

துளசி விதை

துளசி விதை – அரசவிதை சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி காலை – மாலை பாலில் உரைத்துக் கொடுக்க கண்ச்சூடு தீரும்.

துளசிப்பூ

துளசிப்பூ – திப்பிலி – வசம்பு சம அளவு எடுத்து சூரணம் செய்து சர்க்கரை கொஞ்சம் கலந்து தேனில் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் தீரும்.

கருந்துளசி

கருந்துளசி இலை கொஞ்சம் -5 செம்பரத்தம் பூக்களையும் அரைலிட்டர் தண்ணீரில் போட்டு பாதி அளவாக சுண்டக் காய்ச்சி குடிக்க இதயத்தில் குத்தும் வலி – பிடிப்பு வலி குறையும். (அன்றாடம் செய்து கொள்ளவேண்டும்)

செந்துளசி

செந்துளசி நஞ்சு – விஷங்களை நீக்கும். நிலத்துளசி மாந்தம் – வாத சுரம் – குளிர்சுரம் – கணைச்சூடு முதலியவற்றை குணமாக்கும். கல்துளசி கபம் – கோழையை அகற்றும். தீச் சுரத்தை நீக்கும்.

முள்துளசி

முள்துளசி எலி விஷம்- வெட்டுக்காயம் முதலியவற்றை நீக்கும். நாய்த்துளசி இலையை அரைத்து சொறி – படைகளுக்கு தடவ குணமாகும். துளசி மாலை அணிந்தால் தெய்வீக தன்மையை தரும்.

காய்ச்சல் குணமாக

இலையும் -சிறிது இஞ்சியும் சிதைச்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடி கட்டி 50 மிலி அளவு குடிக்க பித்தத்தினால் உண்டான காய்ச்சல் குணமாகும்.

50 கிராம் அளவு துளசி இலை – 10 கிராம் மிளகு இரண்டையும் அரைத்து பயறு அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு காலை – மாலை 1 மாத்திரையை வெந்நீரில் உரைத்துக் கொடுக்க எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!