உடல் நலம்

ஆண்மை பெறுக, விந்தணு அதிகரிக்க

ஆண்மை அதிகரிக்க

தற்போதைய சூழ்நிலை, உணவுப் பழக்கங்களினாலும் மற்றும் பல காரணங்களினாலும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இது சிலருக்கு மரபணு கோளாறுகளினாலும் ஏற்படுகிறது. நாம் இந்த நவீன யுகத்தில் சில பழக்கங்களை மாற்ற இயலாது எடுத்துக்காட்டாக இறுக்கமான உடை அணிதல், கணினியில் அதிக நேரம் வேலை செய்தல், அதிக நேரம் பயணம் செய்தல், புகை மற்றும் மது பழக்கம் போன்றவை முக்கிய காரணம் ஆகும்.

எப்படி பட்ட காரணமாக இருந்தாலும் சித்த மருத்துவத்தில் இதனை சரி செய்ய முடியும். விந்தணு அதிகரிக்கவும் மற்றும் ஆண்மை பிரச்சினை அனைத்திற்கும் நமது சித்த மருத்துவத்தில் பூரணமாக குணமடைய வழிமுறைகள் இருக்கின்றன.

விந்தணு கெட்டிப்பட

ஓரிதழ் தாமரை இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு 100 மிலி காய்ச்சிய பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர அண்மை பெருகும், ஆரோக்கியமான விந்தணு ஊறும்.

விந்துவில் உள்ள குறைபாட்டிற்கு

செவ்வாழை பழத்தை தேனில் ஊற வைத்து தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் விந்தணு உள்ள குறைபாடு நீங்கி உற்பத்தி அதிகரிக்கும்.

அத்தி விதை, அரசம் விதை, ஆலம் விதை இவற்றை சமமாக எடுத்து தூளாக்கி 1 டீஸ்ஸ்பூன் காலை இரவு பாலில் கலந்து குடித்து வந்தாலும் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் விந்தில் உள்ள அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.

ஆண்மை பெறுக

முருங்கைப்பூவை பாலில் காய்ச்சி இரவில் சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்

Leave a Comment

1 × 4 =

error: Content is protected !!