மூலிகைகள்

ஆடா தொடை மருத்துவ பயன்கள்

இதன் ஆங்கிலப் பெயர் ‘ Adhatoda vasica Leaves ‘ என்று பெயர்.

வாசகா என்றும் – ஆட்டுசன் என்றும் – வாசை என்றும் அழைக்கப் படிகிறது. ஈட்டி வடிவமாக நீண்ட இலைகளையும் – வெள்ளை நிற பூக்களையும் கொண்ட குறுஞ் செடி இது.

கிராமப்புரங்களில் வேலிகள் வைத்து வளர்க்கப்படுகிறது. பூங்காக்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.
சிலர் பித்த – கிலேத்தம நோய்க் காரணமாக உட்கார்ந்து இருக்கும் போது தொடைகளை ஆட்டிக் கொன்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நோயை குணமாக்குவதில் இது முன்னணில் இருப்பதால் ‘ ஆடா தொடை ‘ என்று பெயர் வந்தது என்றும் சொல்லப் படுகிறது.

ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதோழிக்கு – நாடின்
மிகுத்தெழுந்த சந்நிபதின் மூன்றும் விலக்கு
மகத்துநோய் போக்கு மறி

குணம் : ஆடாதோடை இலை கபாதிக்கம், வாத தோஷம், பற்பல சுரம், சந்நிபாதம், வயிற்று நோய் ஆகியவை இவைகளை நீக்கும்.

பயன்கள்

ஆடா தொடை இலை – பூ – வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையது. இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு எருமைம் பாலில் காலை – மாலை கொடுத்துவந்தால் இரத்த பேதி – சீதபேதி குணமாகும்.

உலர்ந்த ஆடா தொடை இலைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டி (சுருட்டு பிடிப்பது போல்) லேசாக புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே குணமாகும்.

இலைச்சாறு சளி இருமல் நீக்குவதோடு – வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் – இசிவு நீக்கியாகவும் செயல்படுகிறது.இலையை காயவைத்து இடித்து பொடி செய்து பணங்கற்கண்டுடன் சாப்பிட்டு வர குரல் வளம் இனிமையாகும்.

சிறிதளவு திப்பிலி சூரண்துடன் தேனும் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தியாகும். கபம் கரையும். கஷ்ட சுவாசம் குணமாகும்

இதன் இலைச்சாறுடன் 10 – 15 துளிகளுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை – மாலை சில நாட்கள் குடித்து வந்தால் காமாலை – விக்கல் – வாந்தி – அண்டவாயு – வாத தோஷம் ஆகியவை குணமாகும்.

ஆடாதொடை வேர் – கண்டாங்கத்திரி வேர் சமஅளவு சேர்த்து இடித்து சலித்து வைத்து கொண்டு தேனில் சிறிதளவு குழைத்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு – சளிசுரம் – எலும்புருக்கி ( TB ) சன்னி – இருமல் – ஈளை – குடைச்சல் – சுவாசகாசம் குணமாகும்.

இலைச்சாறுடன் சமஅளவு தேனும் – சர்ககரையும் சேர்த்து தினம் 4 வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் இரத்த வாந்தி – சளி மிகுந்த மூச்சுத் திணறல் – இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு 5 துளிகளும் – சிறுவர்களுக்கு 10 துளிகளும் பெரியவர்களுக்கு 15 துளிகளும் கொடுத்து வரவேண்டும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!